Saturday, June 15, 2013

வாலிபனின் அர்ப்பணிப்பு


தீங்கு நாட்கள்
வராததற்கு முன்னும்,
நான் வெறுக்கும் வருஷஙள்
என்னை தொடராததற்கு முன்னும்,

உலகமும் அதிலுள்ளவைகளும்
என்னை மயக்கும் முன்னும்
உலக கவலைகள் என்னை
பிடிக்கும் முன்னும்

என் கால்கள் இரண்டும்
பெலனற்று போகும் முன்னும்
என் புயங்கள் தன் பெலவீனத்தை
அறிந்துக்கொள்ளும் முன்னும்

என் மூச்சுக்காற்றின் வேகம்
லேசாக குறையும் முன்னும்
என் சிந்தனை திறன்
சோர்ந்துபோகும் முன்னும்

நாடி நரம்புகள்
ஆடி அசைந்துபோகும் முன்னும்
நான்கேழு வருடங்கள்
என் வயதை தொடும் முன்னும்

உலக சிநேகத்தில்
நான் மயங்கும் முன்னும்
உலக மனுஷர்களில் எனக்கு
அருமையானவர்களை இழக்கும் முன்னும்

தேவனே உம்மை நினைக்கிறேன்..

துள்ளித் திரியும் என் இளமை
காலத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன்!
தூய என் பரிசுத்த வாலிபத்தை
உமக்கே அர்ப்பணிக்கிறேன்

இனி,
என் ஆவி ஆத்துமா சரீரம்
உமக்கே!
உமக்கொருவருக்கே!!

நீர் அனுப்பும் இடம் நோக்கி
என் கால்கள் செல்லட்டும்
நீர் விரும்பும் செயலை
என் கைகள் செய்யட்டும்

நீர் சொல்லும் சொற்களையே
என் வாய் பேசட்டும்
நீர் விரும்பும் வண்ணமே
என் ஜீவன் வாழட்டும்!

இப்படிக்கு,
நீர் விரும்பும்படி வாழ விரும்பும் வாலிபன்

www.WordOfGod.in
www.ChristiansMobile.com

Friday, June 22, 2012

இவர் ஒருவரே தேவனானவர்

என்னுயிர் நண்பன்
தூரமாய் போகையில்
இவர் என்
அருகில் இருந்தவர்.

ஆபத்தில் அவன்
மறைந்து போகையில்
என்னருகில் எனக்கு
துணையாய் நின்றவர்.

என் வாழ்வின்
ஜீவனாய் வந்தவர்
என் தாழ்வில்
உயர்வு தந்தவர்.

எனக்காய்
யாவையும் செய்தவர்
தன் உயிரையும்
எனக்காய் மாய்த்தவர்.

இன்றும் எனக்காய்
இருப்பவர்
என்னிதயத்தில் வசிக்கும்
இயேசுவே இவர்!

இவர்,
அன்பின் சிகரமானவர்
பொருமையின் எல்லையானவர்
மகிமையில் மகத்தானவர்
வல்லமையில் சர்வ வல்லவர்.

என்னவென்று சொல்ல
இவரை?
இவர் ஒருவரே
தேவனானவர்!!

www.WordOfGod.in
www.ChristiansMobile.com

Saturday, February 4, 2012

அன்பே இயேசு - இயேசுவே அன்பு


அன்பு எனும்,
மூன்றெழுத்து வார்த்தை,
இயேசு எனும்,
மூன்றெழுத்தில் சொல்லானது!

அன்பு எனும்,
மூன்றெழுத்து விதை,
இயேசு எனும்,
மூன்றெழுத்தில் ம‌ர‌மான‌து!

அன்பு எனும்,
மூன்றெழுத்து ஜீவ‌ன்,
இயேசு எனும்,
மூன்றெழுத்தில் க‌ல‌ந்த‌து!

அன்பு எனும்,
மூன்றெழுத்து ம‌ந்திர‌ம்,
இயேசு எனும்,
மூன்றெழுத்தில் வேத‌மான‌து!

அன்பு எனும்,
மூன்றெழுத்து சிவ‌ம்,
இயேசு எனும்,
மூன்றெழுத்தில் தெய்வ‌மான‌து!!!

அன்பே இயேசு!!
இயேசுவே அன்பு!! 

Thursday, February 2, 2012

Adimaiyai Vaalanume

Nan Devana Thaedama pogayila
Enna kandikka Aalae yilla.

Nan Padhai Theriyama pogayila
Enna nadaththa yaarumilla.

Nan Paavathila moolgi pogayila
Enna kaetpaar yilla.

Naalirendu varushathila enna ariyama nan presangam pannayila
En manathukku pogave yilla.

Elirendu varusham
Vedaththa pidikayila
Atha padikka Manathe yilla.

Padhinaalu vayathula...
Oru nodi poluthila...
Jeevanulla vaarthaiyaala...
en Manathai Aaviyaanavar thirakkayila...
Adimai aanenae en jeevanulla yesuvukku...

Yenne vindhai yithu.
Anbin yesuve um
Adimai aaganume,
Endrum um
Adimaiyai vaalamume.

www.WordofGod.in

Wednesday, February 1, 2012

Nallavar En Devan

Nallavar En Devan
Nanmai Seibavar

Vallavar En Devan
Vazhvai Tharubavar

Nalla Valla Devan Ivar
En Manathai Kollaikondavar Ivar

Ivare Yesu Ratchagar
En Paava Parigaari.

www. WordOfGod.in